Monday, August 23, 2010

தனிமையின் காதல்


கொஞ்சம் கொஞ்சமாக உன்னுள் நான் என்னை இழந்து கொண்டிருக்கிறேன். உன் மடியில் தவழ்ந்து குழந்தையாகிறேன்.
இரு கைகளால் உன் இடையைய் அணைத்து குழைந்து போகிறேன்.
உன் ஓரவிழிப் பார்வையில் உடைந்து போகிறேன்.
இவை அனைத்தையும் நினைத்து பூர்த்துக்கொண்டே இன்பம் கொள்கிறேன். அருகில் இல்லாத உன்னை இருப்பதாக நினைத்துக்கொண்டே புழம்பிக் கொண்டிருக்கிறேன்.
உறங்குவதற்கு உன் மடியைத் தேடி அலைந்துக் கொண்டிருக்கிறேன்.